வூயிஷான் நகரில் பச்சை வண்ண தேயிலை திருவிழா

மோகன் 2017-11-16 09:18:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வூயிஷான் நகரில் பச்சை வண்ண தேயிலை திருவிழா

பூஜியான் மாநிலத்தில் உள்ள வூயிஷான் நகர் முழுவதும் பச்சைவண்ணங்களாய் மிளிர்கின்றன. இங்கு நடைபெறும் பதினொராவது தைவான் நீரிணையின் இரண்டு கரைகளின் தேயிலை பொருட்காட்சியால் இந்த பச்சை தேயிலை வாசனை வண்ணம் நகர் எங்கும் பரவி வீசுகிறது. அரங்கங்கள் தேயிலை பொருட்களால் நிரம்பி வழிகின்றன. 

வூயிஷான் நகரில் பச்சை வண்ண தேயிலை திருவிழா

எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தேயிலையின் வாசனையை நுகர்ந்தபடியும், இங்குள்ள அரங்கங்களில் அழகுற அமர்ந்து தேனீரை சுவைத்தபடியும் அரங்கு அரங்குகளாய் சுற்றி வருகின்றனர். பச்சை தேனீர் மாத்திரம் அல்லாமல் கருப்பு தேனீரும் இங்கு உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு சுவை, வாழும் மக்களுக்குள் இருக்கும் வாசம் போல், வெவ்வேறு பகுதிகளில் வளரும் தேயிலைத் தேனீரின் சுவை தனிச்சிறப்பாக இருக்கிறது. 

வூயிஷான் நகரில் பச்சை வண்ண தேயிலை திருவிழா

மக்களும் வர்த்தகர்களும் தேயிலையை எடுத்தும் குடித்தும் வாசனையை நுகர்ந்தும் அரங்குகளை சுழன்றபடி இருந்தனர். இங்குள்ள அரங்குகளில் தேனீர் தயாரிக்கும் முறை அனைவரையும் கவரும் படி இருக்கிறது. 

வூயிஷான் நகரில் பச்சை வண்ண தேயிலை திருவிழா

தேயிலையை எடுத்து அதை கோப்பையில் போட்டு பிறகு வெந்நீரை அழகாக ஊற்றி சிறிது நேரம் ஆனதும் தேயிலையின் சாரம் தண்ணீரில் இறங்கியதும் சிறிய கோப்பைகளில் அழகாக ஊற்றுவதை பார்க்கும் போதே எத்தனை கோப்பைகளும் பருகலாம் என்ற எண்ணத்தை  நம்மில் விதைத்துவிடுகிறார்கள், பிறகு நாம் குடிக்க குடிக்க தேனீரை ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படியாக அரங்குகள் எங்கும் தேனீரின் வாசம் முழுவதும் பரவி வாடிக்கையாளர்கள் அனைவரையும் அழைக்கிறது.

வூயிஷான் நகரில் பச்சை வண்ண தேயிலை திருவிழா


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்