இந்தியா, ரஷியாவுக்கு பிரிக்ஸ் வங்கி 40 கோடி டாலர் கடனுதவி

சரஸ்வதி 2017-11-22 10:37:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியா மற்றும் ரஷியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு உள்கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி திட்டங்களுக்கு 40 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி அளிப்பதற்கு பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இக்கடன் தொகை, இந்தியாவில் இந்திரா காந்தி கால்வாய் திட்டத்தின் மறுசீரமைப்புக்கும், ரஷியாவின் உஃபா நகரையும் எம்-5 தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் போக்குவரத்து இடைவழி கட்டமைப்புக்கும் பயன்படுத்தப்படும்.

வங்கித்தலைவர் கே.வி.காமத் கூறுகையில், வளங்களை ஒருங்கிணைத்து, பிரிக்ஸ் மற்றும் வளர்ந்து வரும் பிற நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி திட்டங்களுக்காக உதவி அளிக்க தொடங்கப்பட்டதுதான் புதிய வளர்ச்சி வங்கி. வங்கியின் சட்ட உரிமை அடிப்படையிலும், பிரிக்ஸ் நாடுகளின் தேசிய வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையிலும்தான் இக்கடனுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

2014இல் பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், 10 ஆயிரம் கோடி டாலர் முதலீட்டில் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கப்பட்டது. 2015இல் ஷாங்காயில் அதிகாரப்பூர்வமாக இவ்வங்கி திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 150 கோடி டாலர் மதிப்பிலான திட்டங்களுக்கு இவ்வங்கி கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்