சீன எண்ணியல் பொருளாதாரம் பற்றிய மெக்கென்சி அறிக்கை

நிலானி 2017-12-13 11:26:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன எண்ணியல் பொருளாதாரம் செழுமையாக வளர்ந்து வருகிறது. அதன் எதிர்காலம் மேலும் செழிப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று உலகில் புகழ் பெற்ற ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

“எண்ணியல் சீனா:பொருளாதார உலகப் போட்டியாற்றலை உயர்த்துதல்” என்பது இவ்வறிக்கையின் தலைப்பாகும். 2016ஆம் ஆண்டு சீனாவின் இணைய வணிகத் தொகை உலக இணைய வணிகத் தொகையில் 40விழுக்காட்டுக்கு மேலே வகித்தது. உலகின் மிகப் பெரிய செல்லிடப்பேசி வழி கட்டணம் செலுத்தும் நாடாகச் சீனா மாறியுள்ளது. 2016ஆம் ஆண்டில் சீனாவின் செல்லிடப்பேசி வழியாக செலுத்திய தொகை அமெரிக்காவை விட, 11 மடங்கு அதிகமாகும். தவிரவும், முப்பரிமாண அச்சிடுதல், ஆளில்லா வாகனம் உள்ளிட்ட பல எண்ணியல் பொருளாதாரத் துறையின் முதலீடுகளில் உலகின் முதல் மூன்று இடங்களில் சீனா வகிக்கிறது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்