2017ஆம் ஆண்டு சீன ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு

வான்மதி 2017-12-28 15:11:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டு சீன ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு

2017ஆம் ஆண்டு சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த தொகை 4 லட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்ட வாய்ப்புள்ளது. 2018ஆம் ஆண்டு இத்துறையில் சீரான வளர்ச்சிப் போக்கு தொடரும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கௌ ஃபேங் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

உலக வர்த்தக மீட்சியுடன், 2017ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகமும் பெரிதும் மீட்சி அடைந்து வருகிறது. அதிகார வட்டாரத்தின் புள்ளிவிபரங்களின்படி இவ்வாண்டின் முதல் 11 திங்கள்காலத்தில் சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த தொகை 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 15.6 விழுக்காடு வளர்ச்சி வேகத்துடன் இது கடந்த 6 ஆண்டுகளில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, 2013ஆம் ஆண்டு சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் மொத்த தொகை முதன்முறையாக 4 லட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, உலகின் சரக்கு வர்த்தகத்தில் முதலிடம் வகித்தது நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்