2018 உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு

வாணி 2018-01-10 10:43:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை உலக வங்கி 9ஆம் நாள் வெளியிட்டது.

முதலீடு, ஆக்கத் தொழில் ஆகிய துறைகளின் மீட்டெடுப்பு, உலக வர்த்தகத்தின் நிதானமான வளர்ச்சி ஆகிய காரணங்களால், 2017ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வளர்ச்சி இவ்வறிக்கையில் 3 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பெற்ற மிக அதிக அதிகரிப்பாகும். இதில் கிழக்காசியா மற்றும் பசிபிக் பிரதேசம் குறிப்பாக சீனா அதிக பங்கு ஆற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 3.1 விழுக்காடாகவும், புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி வேகம் 4.5 விழுக்காடாகவும் இருக்கக் கூடும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்