2017இல் சீனாவின் வெளிநாட்டு முதலீடு புதிய பதிவு!

நிலானி 2018-01-16 18:30:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017இல் சீனாவின் வெளிநாட்டு முதலீடு புதிய பதிவு!

2017ஆம் ஆண்டு சீனாவின் முதலீட்டாளர்கள் உலகின் 174 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக செய்யப்பட்ட நிதியற்ற நேரடி முதலீட்டுத் தொகை 12008கோடி அமெரிக்க டாலராகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 30விழுக்காடு குறைவாகும். பொருந்தாத முறையில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடு பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தப்பட்டது என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

மேலும், 2017ஆம் ஆண்டு சீனா 87756கோடி யுவான் வெளிநாட்டு முதலீட்டைப் பயன்படுத்தியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, 7.9விழுக்காடு அதிகமாகும். 2018ஆம் ஆண்டு, பெரிய அளவிலான வெளிப்புற அழுத்தத்தைச் சீனா எதிர்கொள்கிறது. இருப்பினும், பொதுவாக வெளிநாட்டு முதலீட்டு ஈர்ப்பளவு, நிலைத்தன்மையாக இருப்பதும், தொழில் கட்டமைப்பு முறை மேலும் மேம்படுவதும் மீது சீனா நம்பிக்கையைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்