சீனாவில் கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகம் மார்ச் திங்களில் தொடக்கம்

மதியழகன் 2018-02-11 18:42:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காயிலுள்ள சர்வதேச எரியாற்றல் வர்த்தகச் சந்தையில், வரும் மார்ச் 26ஆம் நாள் கச்சா எண்ணெய்க்கான முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படும். இதற்கான அடிப்படை முன்னேற்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சீனா அண்மையில் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கவுள்ள கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகம், சீன நாணயமான ரென்மின்பி மூலம் மேற்கொள்ளப்படும். இதில், சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள். இது, சீனாவின் முன்பேர வர்த்தக சந்தை, பன்முகங்களிலும் வெளிநாடுகளுக்குத் திறந்து வைப்பதன் துவக்கமாகும்.

தற்போது, சீனா, உலகின் 2ஆவது கச்சா எண்ணெய் நுகர்வு நாடாகவும், உலகின் முதல் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகவும் உள்ளது.

சீனாவில் கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகம் தொடங்கிய பிறகு, சீனா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் எண்ணெய் சந்தையில் விநியோக-தேவை உறவை வெளிக்காட்டும் விலை உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்