ஜே.பீ. மோர்கன் சேஸ் வங்கிக்கு சீன ரென்மின்பி சேவை அங்கீகாரம்

வாணி 2018-02-15 16:37:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் ரென்மின்பி தீர்வக சேவை வழங்குவதற்கு ஜே.பீ. மோர்கன் சேஸ் வங்கியை அங்கீகரித்துள்ளதாக சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி 13ஆம் நாள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. வெளிநாடுகளில் ரென்மின்பி தீர்வக சேவைக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது அந்நிய வங்கி ஜே.பீ. மோர்கன் சேஸ் வங்கி திகழ்கின்றது. ரென்மின்பியின் உலக மயமாக்கல் போக்கு பெரிய முன்னேற்றம் அடைவதை இது காட்டுகின்றது என்று அமெரிக்க நிதித் துறையைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள ரென்மின்பி சந்தை மற்றும் தீர்வுக் குழுவின் தலைவர் மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், அமெரிக்காவில் மேலதிக ரென்மின்பி அலுவல்கள் மற்றும் சேவைகளை ஊட்புகுத்துவதற்கும், அமெரிக்க தொழில் நிறுவனங்களின் வியாபாரச் செலவைக் குறைப்பதற்கும் இது துணை புரியும் என்றார். தவிரவும், சீன மூலதன சந்தையில் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்து, போட்டியாற்றலை உயர்த்துவதற்கும் இது பயன் தரும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு நியூயார்க்கிலுள்ள சீன மக்கள் வங்கியின் கிளையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி யூவான் மதிப்புள்ள ரென்மின்பி தீர்வக அலுவல்கள் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்