உண்மை பொருளாதாரத்தின் வெளிநாட்டு வளர்ச்சிக்கு சீன அரசு சார் வங்கி மேலும் ஆதரவளிக்கும்

நிலானி 2018-03-30 09:29:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உண்மை பொருளாதாரத்துக்கு சேவையளிப்பது சீன அரசு சார் வங்கியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இவ்வாண்டு சீனாவின் உள்பிரதேசத்தில் சீன வங்கியின் ரென்மின்பி கடன் வழங்கல் 10விழுக்காடு அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளதாக சீன வங்கித் துணை தலைவர் லியு ஜியாங் 29ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் முக்கிய திட்டப்பணி, முன்னேறிய தயாரிப்பு, புதிதாக வளரும் தொழில், பெய்ஜிங்-தியன்ஜின்-ஹெபெய் ஒருங்கிணைப்பு வளர்ச்சி, குளிர்கால ஒலிம்பிக் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகள் மற்றும் திட்டப்பணிகளில் கடன் வழங்கலளவு அதிகரிக்கப்படும்.

சீன உண்மைப் பொருளாதாரத்தின் சர்வதேச உற்பத்தித் திறன் ஒத்துழைப்புக்கும் சீன வங்கி ஆதரவளிக்கும் என்று லியு ஜியாங் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்