உலக வர்த்தக்கத்துக்கு நன்மையை ஏற்படுத்தும் சீனப் பொருளாதார மாற்றம்

மதியழகன் 2018-04-15 16:09:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு உலக வர்த்தக வளர்ச்சியின் வேகம், முன்பு இருந்த 3.2 விழுக்காட்டில் இருந்து, 4.4 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக, உலக வர்த்தக அமைப்பு 12ஆம் நாள் வெளியிட்ட உலக வர்த்தக தரவுகள் மற்றும் எதிர்காலம் என்ற அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதலீட்டுக்குப் பதிலாக, நுகர்வு தற்போது சீனப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி வருகிறது. நீண்டகாலப் பார்வையில், இது, சீனப் பொருளாதாரத்தின் வலுவான தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க உதவும் என்று அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் நுகர்வு மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் அளவுகள் தொடர்ந்து விரிவாகி வருவது, உலக வர்த்தக வளர்ச்சிக்கு உந்து ஆற்றலை இடைவிடாமல் ஊட்டும் என்று ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டைச் சேர்ந்த அதிகாரி லியாங் குவோயொங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்