உலகின் உற்பத்தித் துறையின் பி.எம்.ஐ சரிவு

2018-05-06 15:34:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் உலக உற்பத்தித் துறையைச் சேர்ந்த “பி.எம்.ஐ” எனப்படும் கொள்முதல் மேலாளர்கள்  குறியீடு, 54.4விழுக்காடு ஆகும் என்று சீன சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

உலக உற்பத்தித் துறையின் பி.எம்.ஐ மார்ச் திங்களில் இருந்ததை விட 0.8 விழுக்காடு குறைந்தது.  இது, 2வது திங்களாகத் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. உலக உற்பத்தித் துறையின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் மந்தமாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஆசியாவின் உற்பத்தித் துறையின் பி.எம்.ஐ 51.8 விழுக்காட்டை எட்டி, மார்ச் திங்கள் இருந்ததை விட 0.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் உற்பத்தித் துறை விரைவாக வளர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்