மிகை வர்த்தக நிலைமை சீனாவின் இலக்கு அல்ல

2018-05-10 14:32:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மிகையான வர்த்தகத்தை நாடுவது சீனாவின் இலக்கு அல்ல என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங் தெரிவித்துள்ளார். 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தற்போதைய மிக வர்த்தக நிலைமை முற்றிலும் சந்தை இயங்குவதன் விளைவாகும் என்று சுட்டிக்காட்டினார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த மார்சு திங்களில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு நிகழ்ந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி திங்களுக்குப் பிறகு முதல் முறையாக சுமார் 3000 கோடிய யுவான் பற்றாக்குறை தோன்றியது. ஆனால், பிறகு வந்த ஏப்ரல் திங்களில் மிகை வர்த்தக நிலைமை மீண்டும் தோன்றி 18ஆயிரத்து 280 கோடி யுவானாக மாறியது.

தற்போது சீனா உலகளவில் மிகப் பெரிய சந்தையாகும். சீனாவின் இறக்குமதி முழு உலகிலும் 10இல் ஒரு பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்