திறப்பை விரிவாக்கும் பாதையில் சீனா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சி

மதியழகன் 2018-05-17 12:45:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

திறப்பை விரிவாக்கும் பாதையில் சீனா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சி

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் முன்னாள் மூத்த அரசு அலுவலர்களின் 10ஆவது சுற்று பேச்சுவார்த்தை புதன்கிழமை பெய்ஜிங்கில் நிறைவுபெற்றது.

இதில், சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு பற்றி இரு தரப்பு பிரிதிநிதிகள் உள்ளார்ந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சீன-அமெரிக்க வர்த்தகம், எதிர்கால கொள்கையின் மாற்றம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, எண்முறை பொருளாதாரம், எரியாற்றல், வேளாண்மை, தொழிற்துறை உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவும் அமெரிக்காவும் திறப்பை விரிவாக்குவது, தற்போதைய இரு தரப்புப் பொருளாதார வர்த்தக உறவின் வளர்ச்சிக்கு நன்மை பயப்பதாக அமையும் என்று பிரதிநிதிகள் ஒருமனதாகக் கருதுகின்றனர்.

அமெரிக்க வணிகச் சங்கத்தின் சீன மையத் தலைவர் ஜெரிமி வாட்டர்மென் 16ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

அமெரிக்கா ஏற்றுமதி பொருட்களுக்கு உயர் சுங்க வரி விதிக்கும் நடவடிக்கை, தவறானது. இது, அமெரிக்காவின் சொந்த நலன்களைப் பாதிக்கும். பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், கதவை மூடுவதற்குப் பதிலாக, சந்தையை திறந்து வைக்க வேண்டும்  என்று தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில்,  வெளிநாட்டு திறப்பு நிலையைத் தொடர்ந்து விரிவாக்கி வரும் சீனா, அடுத்தடுத்து திட்டவட்டமான நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அண்மையில், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், சீனாவின் ஷாங்காயில் தனது நிறுவனத்தை அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளது. இவை எல்லாம், பேச்சுவார்த்தையிலுள்ள பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. வெளி உலகத்துக்கு சீனாவின் கதவு மேலதிக அளவில் திறந்ததாக இருக்கும். அதனால், அமெரிக்கா நன்மை பெறும் என்று பிரதிநிதிகள் நினைக்கின்றனர். ஜெரிமிய் வாட்டர்மென் மேலும் கூறியதாவது

சீனா  சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை செயல்படுத்தி வரும் அதேசமயத்தில், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் மேலதிக வாய்ப்புகளை பெற விரும்புகின்றன. இது, அனைவருக்கும் கூட்டு வெற்றி பெறும் வாய்ப்பு ஆகும் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் சீனத் தூதர் சோ வென்ஜோங் இப்பேச்சுவார்த்தையில் தெரிவித்ததாவது

திறப்பை விரிவாக்குவது, சீனாவின் தேவை மட்டுமல்லாமல், பிற நாடுகள் சீனாவுடன் இணைந்து ஒரு திசையை நோக்கி செல்வதற்கு உதவும்.  குறிப்பாக, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எங்களுடன் இணைந்து, திறப்புப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புதிய சுற்று பேச்சுவார்த்தை இவ்வாண்டு நவம்பர் அமெரிக்காவில் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்