ZTE நிறுவனச் சிக்கலைத் தீர்க்க, சீனா-அமெரிக்கா உடன்பாடு

மதியழகன் 2018-05-22 14:43:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

 [File photo: IC]

[படம்: IC]

சீனாவின் ZTE நிறுவனச் சிக்கலைத் தீர்ப்பது தொடர்பாக, சீனாவும் அமெரிக்காவும் ஒத்த கருத்துகளை எட்டியுள்ளன என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  என்ற செய்தித்தாள் திங்கள்கிழமை தெரிவித்தது.

இச்சிக்கலுக்கான தீர்வு தொடர்பான விபரமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  உடன்பாட்டை எட்டினால், ZTE நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களில் இருந்து உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான தடையை டிரம்ப் அரசு அகற்றும் என்று இந்த செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விபரங்களை கலந்தாலோசிக்கும் வகையில், அமெரிக்காவின் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த உயர்நிலை பிரதிநிதிக் குழு ஒன்று சீனாவிற்கு வரவுள்ளதைச் சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உறுதிச் செய்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்