இறக்குமதி வணிகப் பொருட்களின் மீதான சீனர்களின் தேவை அதிகரிப்பு

தேன்மொழி 2018-05-31 15:32:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு நுகர்வுப் பொருட்கள் தொடர்பான கள ஆய்வு அறிக்கை ஒன்றை சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இறக்குமதி நுகர்வுப் பொருட்கம் மீதான சீன நுகர்வோரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டோரில், இவ்வாண்டின் பிற்பாதியில், இறக்குமதி வணிகப் பொருட்கள் வாங்குவதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளவரின் எண்ணிக்கை. 30விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்துள்ளது. ஒப்பனைப் பொருட்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பொருட்களின் உயர்வான தரமே, அவற்றை வாங்கும் முக்கிய காரணியாகும் என்று 70விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சீனத் தொழில் நிறுவனங்களின் இறக்குமதி அளவை அதிகரிக்கும் விருப்பம் அதிகரித்து வருகின்றது என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டது.

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஆறு திங்களில், சீன நுகர்வோர் வாங்கத் திட்டமிட்டுள்ள இறக்குமதி வணிகப் பொருட்களில், ஒப்பனைப் பொருட்கள், கைக்கடிகாரம், மூக்குக் கண்ணாடி, தாய் மற்றும் கைக்குழந்தை பயன்பாட்டுப் பொருட்கள், கார், மகிழுந்து நகை மற்றும் அணிகலன் ஆகியவை முறையே முன்னணி வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆய்வகத்தின் அதிகாரி பெய் மிங் கூறுகையில், நுகர்வுத் தொகை அதிகரிப்பதுடன், வணிகப் பொருட்களின் தரம் மீதான கவனம் முன்பை விட மேலும் அதகரித்து வருகின்றது என்றார்.

இதனிடையில், இறக்குமதி வணிகப் பொருட்கள் மீதான நுகர்வோரின் தேவை அதிகரிப்பதால், சீனத் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு வணிகப் பொருட்களை இறக்குமதி செய்யும் விருப்பம் அதிகரித்து வருகின்றது. இவ்வறிக்கையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 92 வணிகப் பொருட்களின் வகைகளில், திராட்சை மது, பழம் வகைகள், விளையாட்டு ஆடை, குழந்தைகள் உணவு, டயாப்பர்ஸ், தோல் பராமரிப்பு பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள், கைக்கடிகாரம், மகிழுந்து உள்ளிட்ட 34 வகை வணிகப் பொருட்களை இறக்குமதி செய்ய சீனத் தொழில் நிறுவனங்கள் அதிகமாக விரும்புகின்றன.

உண்மையில், கடந்த ஆண்டுகளில், முழுமுயற்சியுடன் இறக்குமதி அளவை சீனா விரிவாக்கி வருகின்றது. மேலும் அதிகமான இறக்குமதி வணிகப் பொட்களின் சுங்க வரியும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டின் ஜனவரி திங்கள் வரை, சீனாவில் வரி விலக்க சலுகை வழங்கப்பட்டுள்ள இறக்குமதி வணிகப் பொருட்களின் எண்ணிக்கை, 8000 தாண்டியுள்ளது. சில இறக்குமதி வாகனங்களின் சுங்க வரி, 20விழுக்காடு மற்றும் 25விழுக்காட்டிலிருந்து, 15விழுக்காட்டாகக் குறைக்கப்படுவதாக சீனா அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்