மார்கிட் மோல்னார்:சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி உலகமயமாக்கத்துக்குத் துணைப் புரியும்

பூங்கோதை 2018-06-18 17:11:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மார்கிட் மோல்னார்:சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி உலகமயமாக்கத்துக்குத் துணைப் புரியும்

2018ஆம் ஆண்டு, சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவாகும். சீனாவின் வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கப் போக்கின் மீதான செல்வாக்கு பற்றி, பலமுறை ஆய்வுப் பயணம் செய்துள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பைச் சேர்ந்த சீனப் பொருளாதாரக் கொள்கைக்கான ஆய்வகத்தின் இயக்குநர் மார்கிட் மோல்னார் அவரது சொந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் பேசுகையில், சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. இதைத் தவிர, சீன வளர்ச்சியின் கருத்து மற்றும் வழிமுறையாகவும் இது மாறியுள்ளது. பிற நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகளைப் பொருத்தவரை, கட்டமைப்பு சீர்திருத்தத்தில் சீனா பெற்றுள்ள சாதனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் அவர்.

மேலும், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை, சீனாவை, உலகத்துடன் ஒன்றிணைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ளிட்ட முன்மொழிவுகள், உலகமயமாக்கப் போக்கை முன்னேற்றுவதற்குத் துணைப் புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்