ரென் மின் பியின் மாற்று விகிதம்

வாணி 2018-07-04 18:28:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த ஜுன் திங்களின் நடுப்பகுதி முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான சீன நாணயமான ரென் மின் பியின் மாற்று விகிதத்தில் தெளிவான சரிவு காணப்பட்டுள்ளது. ரென் மின் பியின் மாற்று விகிதம் சரியான அளவுக்குள் ஏற்றத்தாழ்வு அடைந்து அடிப்படை நிதானத்தை நிலைநிறுத்தும் என்று ஜுலை 3ஆம் நாள் சீன மத்திய வங்கியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்குப் பின், ரென் மின் பியின் மாற்று விகிதம் அதிகளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுன் திங்களில், அமெரிக்க டாலருக்கான ரென் மின் பியின் மாற்று விகிதம் மொத்தமாக 3.3 விழுக்காடு குறைந்தது. இந்த அளவு 1994ஆம் ஆண்டு சீனாவின் அந்நிய செலாவணி சந்தை உருவாக்கப்பட்டதற்குப் பின் காணப்பட்ட திங்களுக்கான பதிவில் மிக அதிக சரிவாகும். குறிப்பாக, கடந்த வாரத்தில் இந்த மாற்று விகிதம் 1.9 விழுக்காடு குறைந்துள்ளது. இந்நிலைமை குறித்து, சீன அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டு ஆய்வகத்தின் தலைவர் டான் யாலிங் கருத்து தெரிவிக்கையில்,

முதலில், இந்நிலைமை அமெரிக்க டாலரின் உயர்வுடன் தொடர்புடையது. தவிரவும், சந்தையிலுள்ள சந்தர்ப்பவாத நிதியும் ரென் மின் மதிப்பிறக்கத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று கூறினார்.

இப்பிரச்சினையைச் சமாளிப்பதற்குரிய நம்பிக்கை சீனாவிடம் உண்டு என்று சீன மக்கள் வங்கியின் துணைத் தலைவர் பான் குங்செங் ஜுலை 3ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார். சீனாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது. பொருளாதாரத் துறையில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் கையாளும் ஆற்றல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்நிய செலாவணி சந்தையில் நிகழும் ஏற்ற இறக்கத்தினைச் சீனா உற்று கவனித்து வருகிறது என்று சீன மக்கள் வங்கியின் தலைவர் யீ காங் தெரிவித்துள்ளார். பங்குப்பத்திர ஊடகம் ஒன்றில் 3ஆம் நாள் வெளியிட்ட தன்னுடைய கட்டுரையில், தற்போது சீனாவின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. நிதித் துறையில் சந்திக்கக் கூடிய இடர்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அமைப்புமுறையின் மேம்பாட்டுப் போக்கு விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச நிதி துறையில் வரவும் செலவும் சரிசம நிலையில் உள்ளது. நாடு கடந்த மூலதனப் புழக்கம் ஒப்பீட்டளவில் சரிசம நிலையில் உள்ளது என்று யீ காங் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ரென் மின் பியின் மதிப்பு தொடர்ச்சியாகக் குறையப் போவதில்லை. அமெரிக்க டாலருக்கான அதன் மாற்று விகிதமும் சீனப் பொருளாதாரத்தின் அடிப்படை நிலைமையின்படி மாறும் என்று ஆய்வாளர்கள் பொதுவாக கருதுகின்றனர். ஆகவே, முன்பு இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு மற்றும் ரென் மின் பி மதிப்புக்குறைவு என்ற கெட்ட சுழற்சி நிகழுவதற்கான வாயப்பு மிகக் குறைவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்