அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை தவறானது:சீனா
சுங்க வரி அதிகரித்தலைப் பயன்படுத்தி உலகளவில் இதர நாடுகளை மிரட்டும் அமெரிக்காவின் செயல் காலக் கண்ணோட்டத்துக்குப் புறம்பானது என்று சீன வணிக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபங் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உண்மையாக சுங்க வரியை அதிகரித்தால், சீனாவின் மைய நலன்களைப் பேணிக்காக்கும் வகையில், சீனா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அச்சுறுத்தல் மற்றும் பறித்தலுக்கு சீனா ஒருபோதும் அடிபணியாது. அதேவேளையில், உலகளவில் சுயேச்சை வர்த்தகத்தையும் பல தரப்பு அமைப்புமுறையையும் பாதுகாக்கும் சீனாவின் மனவுறுதி அசைக்கப்பட முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.