உலக வர்த்தகப் போரில் சமரசம் செய்வதன் விளைவுகள்!

மதியழகன் 2018-07-09 19:14:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுலை திங்கள் முதல்,  அமெரிக்காவின் டிரம்ப் அரசு தொடுத்த வர்த்தகப் போருக்கு எதிராக, பல்வேறு நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இதனிடையில்,  1,260  கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க கனடா முடிவெடுத்ததைத் தொடர்ந்து, மெக்சிகோ  2ஆவது சுற்று பதிலடி மேற்கொண்டு, 3,00 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் சங்க வரி விதித்துள்ளது.  ஜுலை 6ஆம் நாள் முதல், 3,400 கோடி டாலர் அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் சுங்க வரி விதிப்பை சீனா செயல்படுத்தத் தொடங்கியது. அதே நாளில், அமெரிக்காவின் சில பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாகவும் ரஷியா அறிவித்தது.

உலகத் தொழில்களின் தொடர் சங்கிலிகளிலுள்ள பலதரப்புகளின் நலன்களைப் பாதிக்கும் வர்த்தகப் போரில்,  மேலதிக நாடுகள் சிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில், மென்மை போக்கைப் பின்பற்றும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்காவின் வர்த்தகப் போரை சகித்துக் கொள்ளும் செயல், ஒரு நாளைக்கு தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நிக்கெய் ஆசியா ரிவீய்வ்  என்ற இதழ் தனது இணையதளித்தில் வெளியிட்ட விமர்சனக் கட்டுரையில்

1930ஆம் ஆண்டு, அமெரிக்காவின் தொழிற்துறையைக் காக்கும் வகையில், 1000க்கும் அதிகமான பொருளியலாளர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வெளிநாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் சுங்க வரி விதிக்க, அப்போதைய அரசுத் தலைவர் ஹூவர் முடிவெடுத்தார். இதன் விளைவாக, அமெரிக்காவுக்கு எதிராக, ஐரோப்பிய நாடுகள் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வர்த்தகப் போர், உலகப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையில்லா வர்த்தக அமைப்புமுறையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுமாறு டிரம்ப் அரசுக்கு அறிவுறுத்தும் வகையில், உலகின் வளர்ந்த நாடுகள் ஒரே குரலில் ஒலியை எழுப்ப வேண்டும் என்றும் இக்கட்டுரையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார உலகமயமாக்கத்தால், தொழிலின் தொடர் சங்கிலியை, பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்கள், நெருக்கமாக சார்ந்திருக்கின்றன. டிரம்ப் அரசு தொடுத்த வர்த்தகப் போர்,  சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல், பொருளாதார உலகமயமாக்கத்திற்கு சவாலை ஏற்படுத்துவதாக உள்ளது.  ஒரு தரப்பின் நலனுக்கு மட்டுமல்லாமல்,  தொழில் தொடர் சங்கிலி மற்றும் மதிப்பு சங்கிலியின் பல்வேறு தரப்புகளின் நலன்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.

உலகமயமாக்கத்தின் சூழ்நிலையில்,  ஒரு தரப்பு தொடுத்த வர்த்தகப் போரில்,  பிற தரப்புகள் கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம்,  ஒருதரப்பு வாதமும், வர்த்தக பாதுகாப்புவாதமும் உலக பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் தாக்கங்களை, குறைந்தபட்ச நிலையில் கட்டுப்படுத்தலாம். இந்நிலையில், ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்