வர்த்தகப் போரில் உறுதியுடன் முன்னேறிச் செல்லும் சீனா

மதியழகன் 2018-07-12 19:47:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது, சீன-அமெரிக்க வர்த்தகப் போர் மூண்டுள்ளது. அது மேலும்  தீவிரமாகவும் வாய்ப்புள்ளது.  சீனப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டால், உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற கவலை வெளியுலகத்தில் எழுந்துள்ளது.

புறநிலையில் கூறும் போது, குறுகிய காலத்தில் அது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், நீண்டகாலப் பார்வையில் நேர்மறை விளைவுகளும் ஏற்படும்  என்று கருதப்படுகிறது.

முதலில், உலக நாடுகளில் அனைத்து தொழில்களையும் கொண்டுள்ள ஒரே நாடாக சீனா திகழ்கிறது. சுமார் 140 கோடி மக்கள் தொகை உடைய சந்தை சீனாவில் உண்டு. கிட்டத்தட்ட அனைத்து பொருட்களையும் சீனா உற்பத்தி செய்யும் அதேவேளையில், போதுமான அளவிலான சந்தை நுகர்வுத் தேவை உள்ளது. தவிரவும், சீனாவில் பிரதேசங்களின் வளர்ச்சி  சமனற்ற நிலையில் உள்ளது. இதனைத் தீர்க்க தற்போது சீனா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழில்களின் வளர்ச்சி, மனிதவளம் மற்றும் மூலதனப் புழக்கம், தொழில்நுட்பப் புதுமையாக்கம் ஆகியவற்றுக்கு மேலதிக வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.

இரண்டாவதாக, உள்நாட்டுத் தேவை, சீனப் பொருளாதரா வளர்ச்சிக்கு மிக பெரிய உந்து சக்தியாக மாறியுள்ளது. தற்போது, சீனப் பொருளாதார அதிகரிப்பின் 90 விழுகாடு, உள்நாட்டுத் தேவையின் மூலம் நனவாகியுள்ளது. இதில், பொது மக்களின் நுகர்வு, 60 விழுக்காடு பங்கினை கொண்டுள்ளது. மேலும், நுகர்வுத் தேவையும் தொடர்ந்து உயர்த்து வருகிறது.

மூன்றாவது, சீனாவின் புதுமையாக்க ரீதியிலான வளர்ச்சி தொடர்ந்து முன்னேறி வருகிறது.  சீனாவின் உயர் அறிவியல் தொழில் நுட்பத்தின் புதுமையாக்கத் திறனை ஒழித்து, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக, அமெரிக்கா சீனாவின் மீது  வர்த்தகப் போரைத் தொடுத்துள்ளது. ஆனால், புதுமையாக்கம் செய்வதன் மூலம் வளர்ச்சி அடைவது, சீனச் சமூகத்தில் திட்டப்படி செயலுக்கு வந்துள்ள தொலைநோக்குத் திட்டமாகும். இத்தகைய வளர்ச்சியை, அமெரிக்காவின் வர்த்தக சுங்க வரிக் கொள்கை தடுக்க முடியாது.

நான்காவது, வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி வரும் சீனா,  தனது கூட்டாளிகளுக்கு மேலதிக நன்மைகளை அளித்து வருகிறது. அன்னிய முதலீட்டை சீனாவில் இருந்து வெளியேற்றி, அமெரிக்காவுக்குத் திரும்ப பெற முயலும் டிரம்ப்-அரசு, உலகின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கு எதிராக வர்த்தக போரைத் தொடுத்துள்ளது. ஆனால், சீனாவின் திறப்புக் கொள்கை, டிரம்பை வருத்தமடையவே செய்யும்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக மோதல் ஆரம்பித்த 3 மாதங்களில், அமெரிக்கா, அதன் , வர்த்தக கூட்டாளிகளுக்கு அடுத்தடுத்து கூடுதல் சுங்க வரியை விதித்துள்ளது. சீனா, திட்டப்படி திறப்புக் கொள்கை மற்றும் நடவடிக்கைகளை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

சீன-அமெரிக்க வர்த்தகப் போர், நீண்டகாலம், சிக்கலாகவும், கடினமாகவும் இருக்கும். சீனா மன ரீதியில் தன்னை தயார் செய்து தொண்டு, வர்த்தகப் போரைச் சமாளிக்கும் நம்பிக்கையைக் கொண்டுள்ளது. தன் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதேசமயத்தில், சீர்திருத்தம் மற்றும் திறப்பை சீனா இடைவிடாமல் விரிவாக்கி வருகிறது. அதன் மூலம், தேசிய அளவில் வளர்ச்சியை அடைந்து, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நிலையான உந்து ஆற்றலாக மாறுவதற்கு சீனா முயற்சி செய்யும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்