வெளிப்புற அச்சுறுத்தல் கண்டு சீனா அஞ்சாது

2018-07-23 19:09:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிப்புறத்திலிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அனைத்து வணிகப் பொருட்களின் மீது சுங்க வரி வசூலிப்பதற்குத் தயாராக உள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளரிடம் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கங் சுவாங் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறுகையில்,

வெளிப்புறத்திலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் கண்டு சீனா எப்போதுமே அஞ்சியதில்லை. மக்களின் நலன்களையும் உரிமையையும் பேணிக்காக்க சீன அரசுக்கு முழு நம்பிக்கை உண்டு என்று தெரிவித்தார்.

மேலும், தன்னடக்கத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை அறிவுப்பூர்வமாகக் கையாள சீனா விரும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்