உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் விளையாடான விதிகள்

வாணி 2018-07-25 17:11:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லேரி குத்லோ அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளிக்கையில், அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டும் விருப்பம் சீனாவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். இவரது பார்வையில், உலக வர்த்தக அமைப்பின் விதிகள் அமெரிக்காவால் வரையப்பட வேண்டும். அமெரிக்காவின் விருப்பத்துக்கு அத்துமீறும் செயல்கள் அனைத்தும் விதிகளுக்குப் புறம்பானதாகும்.

ஒருபுறம், பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பின்பற்ற அமெரிக்கா மறுத்துள்ளது. எடுத்துக்காட்டாக உலக வர்த்தக அமைப்பைச் சேர்ந்த மேல் முறையீட்டு நிறுவனத்தில் புதிய நீதிபதிகளின் நியமித்தலுக்கு அமெரிக்கா தடை ஏற்படுத்தி வருகின்றது.

மறுபுறம், சொந்த நாட்டின் சட்டங்கள் மூலம், போட்டியாளர்களையும் வர்த்தகக் கூட்டாளிகளையும் அமெரிக்கா அடக்கி வருகின்றது.

வர்த்தக சர்ச்சைகளைத் தீர்க்கும் போது அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, இரு தரப்பு வடிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. காரணம், இரு தரப்புச் சண்டையில் உலகில் ஒரேயொரு வல்லரசான அமெரிக்கா தோல்வி அடையாது என்று அமெரிக்கா நம்புகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்