உலகிலேயே பெரிய சந்தை வாய்ப்புகளை கொண்ட நாடு சீனா

மதியழகன் 2018-07-28 16:42:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகிலேயே பெரிய சந்தை வாய்ப்புகளை கொண்ட நாடு சீனா

100 நாட்களுக்குப் பிறகு, முதலாவது சீனச் சர்வதே இறக்குமதிப் பொருட்காட்சி  சீனாவின் ஷாங்காயில் நடைபெறவுள்ளது. தற்போது வரை, 130க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2,800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன. மேலும், 30க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள், அடுத்த ஆண்டில் 2ஆவது பொருட்காட்சியில் பங்கேற்க முன்னதாகவே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன அரசு நடத்தும் இந்த இறக்குமதிப் பொருட்காட்சி, இத்தகைய ஈர்ப்பாற்றலைக் கொள்வது எதிர்பாராததல்ல. ஏன்னென்றால், தற்போது வர்த்தகப் பாதுகாப்புவாதம், உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படுத்திய சூழ்நிலையில், ஒவ்வொரு நிறுவனமும், தடையைத் தாண்டி புதிய வளர்ச்சி வாய்ப்பை தேடி வருகிறது.

சுமார் 140 கோடி மக்கள் தொகை உள்ள நுகர்வுச் சந்தை மற்றும் முதலீட்டுச் சந்தையாக சீனா விளங்குகிறது. மேலும், தடையில்லா வர்த்தகம் மற்றும் எளிமையான முதலீட்டை ஆதரிக்கும் மனவுறுதியுடன் சீன அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. மேலும் திறந்த நிலையையும் சீனா விரிவாக்கி வருகிறது. எனவே, உலக நிறுவனங்களைப் பொறுத்த வரை, உலக அளவிலேயே சீனாவை விட மேலும் நல்ல வாய்ப்பை கண்டுபிடிப்பது கடினமானது.

தற்போது, சீனாவில் நடுத்தர வருமானம் உடைய மக்கள் தொகை 40 கோடியை எட்டியது. உலகில் வேளாண் பொருட்கள் இறுக்குமதி நாடுகளின் வரிசையில், சீனா முதலிடம் வகிக்கிறது. மேலும், உலகின் மிகப் பெரிய வாகன விற்பனைச் சந்தையாகவும் சீனா திகழ்கிறது. இந்த பெரிய நுகர்வுத் தேவையை மட்டுமல்லாமல், சீனாவில் சீரான பொருளாதார வளர்ச்சி, முழுமையான தொழில் சங்கிலி,  தொழில் புரிவதற்கான சாதகமான சூழ்நிலை, புதுமையாக்க ஊக்குவிப்பு வளர்ச்சி நெடுநோக்கு  ஆகியவையும் இருப்பதால், உலகில் ஈர்ப்பாற்றலுடைய முதலீட்டுச் சந்தையாகவும் சீனா விளங்குகிறது.

பழைய தொழில்களுக்கு கூடுதலாக, புதிய சுற்று தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில் புரட்சி உலகளவில் தீவிரமாகி வருகிறது. சீனாவில், தூய்மையான எரியாற்றல், மின்சார வாகனம், மின்கலம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகள் வளர்ந்து வருவதுடன், அன்னிய முதலீடு, வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவில் நல்ல வளர்ச்சி வாய்ப்புகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்