ரென் மின் பியின் மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை

வாணி 2018-07-31 14:26:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரென் மின் பியின் மாற்று விகிதத்தைச் சீனா ஒரு சார்பாகக் கட்டுப்படுத்தியதாக அமெரிக்கா அண்மையில் குற்றஞ்சாட்டியது. இது குறித்து, உலக நாணய நிதியத்தின் முதன்மை பொருளியலாளர் மௌரீஸ் ஒப்ஸ்ஃபீல்ட் அமெரிக்க செய்தி ஊடகங்களிடம் கூறுகையில்,

ரென் மின் பியின் மாற்று விகிதத்தைச் சீனா கட்டுப்படுத்தியதற்கான சான்று எங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் கூறியதன்படி, ரென் மின் பியின் மாற்று விகிதம் சந்தையின் தேவைக்கிணங்க உருவாக்கப்படுகிறது. நாணயத்தின் போட்டிக்காக ரென் மின் பியின் மதிப்பைக் குறைக்க சீனா விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சீனாவின் இந்த கருத்துக்கு 3 முக்கிய ஆதரங்கள் உண்டு.

1, தற்போது சீனாவின் உள்நாட்டு நுகர்வு பொருளாதார அதிகரிப்புக்கான முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது.

2, வெளிநாட்டு திறப்பு அளவை மேலும் விரிவாக்குவது ரென் மின் பின் கையிருப்புக்கு உறுதியாகப் பங்காற்றும்.

3, வேண்டுமென்றே ரென் மின் பியின் மதிப்பைக் குறைப்பது சீனாவுக்கு பயன் தராது. இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் ஏற்றுமதி அளவு கடந்த ஆண்டில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இறக்குமதி அளவு 11.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில், ரென் மின் பி மதிப்பு குறைந்தால், இறக்குமதியின் செலவு மேலும் அதிகரிப்பது உறுதி.

அண்மை காலமாக, ரென் மின் பி மாற்று வகிதத்தின் ஏற்றத்தாழ்வை எப்படி மதிப்பிடுவது?என்ற கேள்வி எழுந்து விருகிறது.

முதலாவதாக, இது உலகளவில் அபாயத்தைத் தவிர்ப்பதுடன் தொடர்புடையது. டிரம்ப் அரசு வர்த்தகப் பாதுகாப்பை பரந்தளவில் மேற்கொண்டு வருவதால், பல்வேறு நாடுகளும் அபாயத்தைத் தவிர்க்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக அதிகரித்துள்ளன.

இராண்டாவதாக, இது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வுடன் தொடர்புடையது. இவ்வாண்டின் முற்பாதியில், அமெரிக்க டாலரின் மதிப்பு 2.45 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, இது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையது.

அண்மையில், ரென் மின் பி மாற்று விகிதத்தின் ஏற்றத்தாழ்வு நியாயமான அளவை மீறவில்லை என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். உலக நாணயங்களில் இது வலுவான இடம் வகிக்கின்றது. நடைமுறையில், மாற்று விகிதத்தின் ஏற்றுத்தாழ்வானது சந்தை இயங்குவதன் இயல்பான நிலைமையே ஆகும். தற்போது, சீனாவின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. அந்நிய செல்லாவணியின் தேவையும் விநியோகமும் சரிசம நிலையில் உள்ளன. ஆகவே, ரென் மின் பியின் மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை என்பது தெளிவுற விளங்குகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்