உலகில் தங்கத்தின் தேவை குறைவு

மதியழகன் 2018-08-02 18:50:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகில் தங்கத்தின் தேவை இந்த ஆண்டின் 2-வது காலாண்டில் குறைந்துள்ளது. இந்த காலத்தில் அதன் வர்த்தகத் தொகை, 964 டன்னுக்கு குறைந்துள்ளது. இதனால், உலகில் தங்கத்தின் தேவையளவு 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு முற்பாதியில் தான் மிக குறைவான அளவில் பதிவாகியுள்ளது என்று உலக தங்க கவுன்சில்  வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில், உலகின் மிகப் பெரிய தங்கச் சந்தையாக சீனாவின் தங்க தேவை கடந்த காலாண்டில் 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. தங்க விலை உயர்வு, பருவகால மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் தங்க நகைகளின் தேவை 8 விழுக்காடு குறைந்தது. இருப்பினும், இவ்வாண்டின் முற்பாதியில் உலகின் மொத்த தேவையளவு இன்னும் 1,031 டன்னாகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்