வர்த்தக போரில் அமெரிக்கா பெற்ற முதல் பாதிப்பு

மோகன் 2018-08-06 15:46:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தக போரில் அமெரிக்கா பெற்ற முதல் பாதிப்பு

ஜூலை 30ஆம் நாள், ஜெர்மனியின் வாகன உற்பத்தி தொழில்நிறுவனமான பவரியன் மோட்டார் நிறுவனம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு, சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் இரண்டு வகை கார்களின் விலையை முறையே 4 மற்றும் 7 விழுக்காடு உயர்த்தியது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் முழு உலக கொள்வனவு உதிரிப்பாக விலை உயர்வு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு சீனா விதித்துள்ள கூடுதல் 40 விழுக்காட்டு சுங்க வரி ஆகியவை விலை அதிகரிப்பின் முக்கியக் காரணமாகும்.

அமெரிக்க அரசின் வர்த்தகப் போரினால், ஜெர்மனி வாகன நிறுவனம் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க வாகனப் பணியாளர்கள் வேலையிழப்பு அபாயத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்