வர்த்தகப் போரின் பாதிப்பைக் குறைக்கச் சீனத் தொழில் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள்

வாணி 2018-08-14 16:48:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக மோதல் நிகழத் தொடங்கியது முதல், அமெரிக்காவிலிருந்து சோயா அவரை இறக்குமதியின் குறைவால் ஏற்படும் சந்தை அபாயத்தைக் குறைக்கும் வகையில், சீனத் தொழில் நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சீன கொப்கொ(COFCO)நிறுவனம், சைனொகரேன்(SINOGRAIN)நிறுவனம் முதலியவை கடந்த சில ஆண்டுகளாக தங்களது சோயா அவரை கொள்வனவு இலக்கை பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொண்டு வருகின்றன.

உலகளவில் மிக அதிக அளவிலான சோயா அவரை இறக்குமதி நாடாக சீனா திகழ்கின்றது. அதன் இறக்குமதி அளவு உலகின் மொத்த அளவில் சுமார் 60 விழுக்காடு வகிக்கின்றது. அதேவேளையில், அமெரிக்காவின் சோயா அவரை ஏற்றுமதி அளவில் 60 விழுக்காடு சீனாவுக்கு வருபவை குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு வர்த்தகப் போரை அமெரிக்கா ஆரம்பித்தப் பிறகு, இதற்கு எதிர் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சோயா அவரையின் மீது சீனா 25 விழுக்காடு சுங்க வரியை வசூலிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக அமெரிக்காவின் சோயா அவரையின் வரித் தொகை ஒரு டன்னுக்கு 700 முதல் 800 யுவான் வரை அதிகரிக்கும். இதனால், சீனச் சந்தையில் அமெரிக்காவின் சோயா அவரை தனது மேம்பாட்டை இழந்துள்ளது.

உலகளவில் 5ஆவது பெரிய தானிய வணிக நிறுவனமான சீன கொப்கொ நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கூறுகையில்,

இவ்வாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சோயா அவரையின் அளவு 16 விழுக்காடு குறைந்துள்ளது. அதேவேளையில், பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அளவு 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக சர்ச்சை தொடர்ந்தால், தென் அமெரிக்க நாடுகள், ஒரு மண்டல் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகள் ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா அவரையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும். அவற்றில் பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, ரஷியா, உக்ரேன், கசகஸ்தான் ஆகியவை இடம்பெறுகின்றன.

சைனொகரேன் நிறுவனத்தின் உணவு எண்ணெய் பிரிவின் துணைத் தலைமை மேலாளர் சென் சுயே சுங் கருத்து தெரிவிக்கையில்,

தொழில் நிறுவனங்களின் பார்வையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா அவரை அளவின் குறைவினால் ஏற்படும் பற்றாக்குறையை, இறக்குமதிக் கட்டமைப்பை மேம்படுத்துவது, உள்நாட்டுச் சந்தையில் பயன்பாட்டுக் கட்டமைப்பை மாற்றுவது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது முதலிய பல்வகை வழிமுறைகள் மூலம் தீர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்