வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்கும் சீனச் சந்தை

மதியழகன் 2018-08-20 17:17:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முதல் 7 திங்கள் காலத்தில், சீனாவில் அன்னிய முதலீட்டுடன் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை, 35,239 ஆகும். மேலும், 49,671 கோடி யுவான அன்னிய முதலீட்டுத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு எண்ணிக்கைகள், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட தலா 99.1 மற்றும் 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளன என்று சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஜுலை திங்களில் அன்னிய முதலீட்டுடன் 5,648 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 113.1 விழுக்காடு அதிகம்.

சீனாவின் அன்னிய முதலீட்டு நிலை சீராக உள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேலும், அன்னிய முதலீடு மேலதிக உயர்மதிப்புள்ள துறைகளுக்கு செய்யப்படும் மாற்றம் காணப்படுகிறது.

அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர், சர்வதேச பொருளாதாரச் சிக்கல் ஆகிய எதிர்மறை காரணிகள் ஏற்பட்ட போதிலும், சீனா அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தொடர்ந்து பாராட்டத்தக்க சாதனை புரிந்து உருவாகிறது.  இதற்கான காரணங்கள் என்னவென்றால்,

முதலாவதாக, சீனாவில் தொழில் புரிவதற்கான சூழ்நிலைத் தொடர்ந்து சீராகி வருகிறது. முதலீட்டுத் தடை படிப்படியாக குறைந்து வருகின்றது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட முதலீட்டுத் தடைக் குறியீட்டின் தரவரிசையில், சீனா 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 இடங்களுக்கு குறைந்தது. சீனாவின் முதலீட்டுச் சூழ்நிலை தொடர்ந்து சீராகி வருவதை அது குறிக்கிறது. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் தனது முதலீட்டு அதிகரித்து வருகின்றன.

இரண்டாவதாக,  சீனாவில் முழுமையான தொழில் சங்கிலி, உயர்ந்த உற்பத்தித் திறன்,  மாபெரும் நுகர்வுச் சந்தை ஆகியவை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொழில்துறை ரீதியிலான பயன்மிக்க மற்றும் பன்முகமான ஆதரவு அளிக்கும்.

மூன்றாவதாக, திறந்த நிலையை விரிவாக்க சீனா உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதுவே, வர்த்தகப் பாதுகாப்புவாதம் உயர்ந்து வரும் நிலைமையில் சந்தைக்கு அரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இது, வெளிநாட்டு மூலதனத்தின் நம்பிக்கையையும் மேம்படுத்தியுள்ளது.

தற்போது, சீனச் சந்தையில் அன்னிய முதலீடு அதிகமாகி வரும் அறிக்குறி,  சீனா குறித்த உலக மூலதனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காட்டுகின்றது.

2017முதல் 2021 வரையான ஐந்து ஆண்டுகளில், சீனா, 60ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அன்னிய முலீட்டை ஈர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, உலக நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளரச்சியை முன்னேற்றுவதற்கு புதிய வாய்ப்பு அளிக்கும். எதிர்காலத்தில்,  தன் நடைமுறைக்கு ஏற்ப, வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை சீனா மேலதிகமாக தளர்த்தும். அதன் மூலம் எளிதில் தொழில் புரிவதற்கான நல்ல சூழ்நிலையுடைய சீனச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் மேலதிக செல்வம் பெறும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்