சீனப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய வெளிநாட்டவர்களுக்கு புதிய விதி

மதியழகன் 2018-09-17 16:06:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் 17ஆம் நாள் முதல், தகுநிலை பெற்றுள்ள வெளிநாட்டவர்கள், சீனாவின் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள், ஏ வகையான பங்கு வர்த்தகக் கணக்கைத் திறப்பதற்கான கட்டுப்பாட்டைத் தளர்த்துவது தொடர்பான புதிய விதிமுறை செப்டம்பர் 15ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தகுநிலை பெற்றுள்ள வெளிநாட்டவர்கள் இன்று முதல் வர்த்தகம் செய்ய வாய்ப்புள்ளது.

புதிய விதிகளின்படி, சீனாவில் பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களும், சீனப் பங்குச் சந்தைகளில் பங்குப் பத்திரங்களை வெளியிட்டுள்ள நிறுவனங்களின் பங்குப் பத்திரங்களைப் பெறும் வெளிநாட்டவர்களும் வர்த்தக கணக்கைத் திறக்க அனுமதி உண்டு என தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்