வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி இல்லை: பிரிட்டன் நாளிதழ்

மதியழகன் 2018-10-04 19:29:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க வர்த்தகப் போரில் அமரிக்கா வெற்றி பெற முடியும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் நினைப்பது தவறானது. வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்று பிரிட்டனின்  தி ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் 3ஆம் நாள் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்த இதழின் முதன்மை பொருளாதார விமர்சகர்  மார்டீன் வோல்ஃப் இக்கட்டுரையில் தெரிவித்ததாவது:

சீன-அமெரிக்க வர்த்தகச் சிக்கலில், இரு மாதிரியான தவறுகளை டிரம்ப் புரிந்துள்ளார். ஒன்று, அதன் இலக்கு அளவுக்கு மீறி மிகவும் பெரியதாக உள்ளது. மற்றொன்று, அமெரிக்காவின் ஆற்றலை அவர் பெரிதுபடுத்தியுள்ளார். இரு நாட்டு வர்த்தகப் பிரச்சினையின் காரணம், அமெரிக்காவின் இறக்குமதி அதிகம் என்பதல்ல. அதன் ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது என்பது தான் என்று கூறினார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆய்வு போலவே, சீன-அமெரிக்க வர்த்தகச் சிக்கல், உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். பொதுவாக கூறின், அமெரிக்காவுக்கு சாதகமற்ற நிலையே நிலவும் என்று வோல்ஃப் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்