அரசு சாரா பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி

வாணி 2018-10-18 18:17:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அரசு சாரா பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி

அரசு சாரா பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி

ஓராண்டுக்கு முன் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 19ஆவது மாநாட்டில், அரசாங்கத்துக்கும் வணிகத் துறைக்கும் இடையில் புதிய சீரான உறவை உருவாக்க வேண்டும். அரசு சாரா பொருளாதாரம் மற்றும் அரசு சாரா பொருளாதாரத்தில் ஈடுபடும் மக்களின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்ற இலக்கு முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செச்சியாங் மாநிலத்தில் அமைந்துள்ள வென் சோ நகரம் சீனாவின் அரசு சாரா பொருளாதாரத்தில் சிறப்பாக வளர்ந்து வரும் முன் மாதிரிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.

புள்ளிவிபரங்களின்படி கடந்த 40 ஆண்டுகளில், சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் 40 விழுக்காட்டு மூலவளங்கள் மூலம் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 விழுக்காட்டுக்கு மேல் பங்காற்றியுள்ளன.

தற்போது, சீனப் பொருளாதாரம் உயர் தரமான வளர்ச்சிக்கான மாற்றுப் பாதையில் இறங்கும் முக்கிய கட்டத்தில் உள்ளது. குறிப்பாக, உலகப் பொருளாதார அமைப்புமுறையின் வேகமான மறுசீரமைப்பு, உலக வர்த்தக சர்ச்சைகள் தீவிரமாகுதல் ஆகியவை நிறைந்த பின்னணியில், சீனாவின் ஏற்றுமதியில்45 விழுக்காடு என்ற அளவில் பங்கு ஆற்றும் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அரசு அவற்றின் வளர்ச்சிக்கு மேலும் வலுவான ஆதரவு அளிக்க வேண்டும். தவிரவும், சந்தை போட்டியில் ஈடுபடும் வேறுபட்ட உரிமை கொண்ட அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும் சம நிலையிலான சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்