சேவைத்துறையில் சீனாவின் இறக்குமதி அளவு

வாணி 2018-11-06 17:09:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சேவைத்துறையில் சீனாவின் இறக்குமதி தொடர்பான அறிக்கை ஒன்றைச் சீன வணிக அமைச்சகம் 6ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, சேவைத் துறையில் சீனாவின் இறக்குமதி அளவு வேகமாக அதிகரித்து, தற்போது அமெரிக்காவுக்கு அடுத்து உலகளவில் 2ஆம் இடத்தில் உள்ளது.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், இதன் மொத்த அளவு 2 இலட்சத்து 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருக்கும். உலகச் சேவைத் துறை இறக்குமதித் துறையின் வளர்ச்சியில் சீனாவின் பங்கு 20 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கும் என்று இவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.

தெற்காசியப் பிரதேசத்தில் இந்தியா சீனாவின் மிகப் பெரிய சேவை இறக்குமதிக் கூட்டாளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்