நவம்பர் 11 விற்பனையில் வெளிநாட்டு நுகர்வோரின் பங்கு
இவ்வாண்டு நவம்பர் 11ஆம் நாளில், சீன இணைய மூல விற்பனைத் தொகை, வரலாற்றில் இல்லாத அளவு உயர்வாகப் பதிவாகியுள்ளது. மேலும் 20இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு நுகர்வோர்கள் அன்று சீன இணைய நுகர்வில் ஈடுபட்டுள்ளனர் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங் 15ஆம் நாள் தெரிவித்தார்.
இதனிடையில், நவம்பர் முதல் நாள் முதல் 11ஆம் நாள் வரை, சீனாவில் வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களின் இணைய மூல விற்பனைத் தொகை, மூவாயிரம் கோடி யுவானைத் தாண்டியது. ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் வணிகப் பொருட்கள் மிகவும் வரவேற்கபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.