அலிபேயின் பயன்பாட்டாளர் எண்ணிக்கை 90 கோடி

வாணி 2018-11-29 15:47:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அலிபே எனும் இணையவழிப் பணப் பரிவர்த்தனை செயலியின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியது என்று 28ஆம் நாள் வெளியான தகவல் காட்டுகின்றது.

இது பற்றி அன்ட் நிதி சேவை குழு கூறுகையில்,

உலகளவில் அலிபே சேவையை வழங்கும் அதேவேளையில், சீனாவின் இணையவழிப் பணப் பரிவர்த்தனை தொழில் நுட்பங்களையும் வணிக சேவை முறைமையையும் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளின் சொந்தமான இணையவழிப் பணப் பரிவர்த்தனை சேவைகளுக்கு வழங்கியுள்ளது. ஆகவே, சீனப் பயன்பாட்டாளர்கள் உட்பட மொத்தம் 300 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இணையவழிச் சேவை புரிந்துள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்