முதலீட்டாளரின் கவலையால் அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி

வான்மதி 2019-01-04 11:19:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலீட்டாளரின் கவலையால் அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி

அமெரிக்க பங்கு சந்தையில் ஜனவரி 2ஆம் நாளில் ஏற்பட்ட ஏற்றத்தை 3ஆம் நாளில் நிலைநிறுத்த முடியவில்லை. நியூயார்க் பங்கு சந்தையில் மூன்று முக்கிய குறியீடுகள் பெருமளவில் சரிவடைந்தன. டோ ஜோன்ஸ் தொழில் சராசரி குறியீடு ஒரு நாளில் 660 புள்ளிகள் வீழ்ந்தது.

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் கவலைப்படுவது, பங்கு சந்தை சரிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவின் வினியோக மேலாண்மை கழகம் அன்று வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த டிசம்பரில் அமெரிக்காவின் ஆக்கத்தொழில் குறியீடு 54.1 ஆகும். 57.5 என்ற மதிப்பீட்டை விட இது குறைவு. மேலும், இக்கழகம் வெளியிட்ட ஆக்கத்தொழிலின் புதிய முன்பதிவு படிவங்கள் குறியீடு, வேலைவாய்ப்பு குறியீடு உள்ளிட்டவற்றில் சரிவு காணப்பட்டுள்ளது.

இந்த தரவுகள் வெளியிடப்பட்ட பிறகு, நியூயார்க் பங்கு சந்தையில் மூன்று முக்கிய குறியீடுகளின் சரிவு அளவு பெரிதும் அதிகரித்தது என்று தி வால் ஸ்டிரீட் ஜார்னல் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்