சீனாவில் திரைப்பட வசூல் சாதனை: ஒரே நாளில் 143 கோடி யுவான்

மதியழகன் 2019-02-07 16:56:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சீனாவின் திரைப்பட வசூல் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. சீனப் புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்கிழமை, 143 கோடி யுவான் வசூல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அதிகபட்ச வசூல், 127 கோடி யுவானாக பதிவாகியுள்ளது.

சீனாவில் திரைப்பட வசூல் சாதனை:  ஒரே நாளில் 143 கோடி யுவான்

அறிவியல் புனைகதையின் படி சீனா முதல்முறையாக பெரும் செலவில் தயாரித்துள்ள திரைப்படம்‘உலாவும் பூமி’(The Wandering Earth)ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, இப்படத்தின் வசூல் 60 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 6090 கோடி யுவான் வசூல் கிடைத்ததுடன், சீனா, உலகின் 2ஆவது பெரிய திரைப்படச் சந்தையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்