சீனாவில் “நம்ப முடியாத நிறுவனங்களின் பட்டியல் அமைப்புமுறை”

பூங்கோதை 2019-07-04 19:10:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங் ஜூலை 4ஆம் நாள் கூறுகையில், “நம்ப முடியாத நிறுவனங்களின் பட்டியல் அமைப்புமுறை” தொடர்பான நடை முறைகளைச் சீனா திட்டப்படி செயல்படுத்தி வருகிறது. இதற்கான விதிமுறை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

சந்தையின் விதிமுறை மற்றும் ஒப்பந்த எழுச்சியை மீறி, வணிகம் அல்லாத நோக்கத்துடன், சீனத் தொழில் நிறுவனங்களின் மீது வினியோக நிறுத்தம் உள்ளிட்ட தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், “நம்ப முடியாத நிறுவனங்களின் பட்டியல் அமைப்புமுறையை”சீனா உருவாக்கியுள்ளது. சீனச் சட்டம் மற்றும் சந்தையின் விதிமுறையைப் பின்பற்றும் நிறுவனங்கள் இது பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்