சீனாவின் மீது அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குக் காரணமில்லை

ஜெயா 2019-08-14 10:48:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பெயர்ப்பட்டியலில் அமெரிக்கா சீனாவை சேர்த்திருக்கும் செயல், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பல்வேறு வட்டாரங்களில் சந்தேகம் மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒருதரப்புவாதம், வர்த்தகப் பாதுகாப்புவாதம் கொண்ட சில செயல்கள், சந்தைத் திட்டத்தைப் பாதித்து, சந்தையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளன என்று நிபுணர்கள் ஒருமனதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அளவுக்கு மீறிய அமெரிக்காவின் நிபந்தனையை அறிவார்ந்து, தன்னம்பிக்கை கொண்டு எதிர்நோக்குவது என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர்கள் இவ்வாறு கூறினர்.

சர்வதேச நாணய நிதியம் 9ஆம் நாள் வெளியிட்ட சீனாவின் 2019ஆம் ஆண்டு 4ஆவது விதிக்கான கலந்தாலோசனை அறிக்கை, 2018ஆம் ஆண்டு சீனாவின் நடப்புக் கணக்கில் மிகைத்தொகை குறைந்துள்ளதையும் ரென்மின்பியின் மாற்றுவிகிதம் பொருளாதார அடிப்படை நிலையுடன் சமமாக இருப்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சீனா மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று இவ்வறிக்கை காட்டுவதாக சர்வதேசச் சமூகம் பொதுவாகக் கருதுகிறது.

சீன மக்கள் வங்கியின் ஆய்வுப் பணியகத்தின் துணைத் தலைவர் சாங்சியேசுன் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறுகையில், அனைத்து வரையறைகளின்படி, சீனா மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடு அல்ல என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

2018ஆம் ஆண்டில் சீனாவின் நடப்புக் கணக்கில் மிகைத்தொகை உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.4 விழுக்காடாகும். மேலும், கடந்த சில ஆண்டுகளாக, இது தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே காலத்தில் சீனாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்புத் தொகை நிதானமாக இருந்து வருகிறது என்றார்.

சீன மின்ஷேங் வங்கியின் தலைமை ஆய்வாளர் வென்பின் கூறுகையில், மாற்று அமைப்பு முறையைப் பார்க்கும் போது, ரென்மின்பியின் மாற்றுவிகிதச் சீர்திருத்தம் இதுவரை சந்தைமயமாகியுள்ளது. சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்பைப் பார்க்கும் போது, மாற்றுவிகிதப் போட்டியாற்றலைக் குறைக்கும் தேவை சீனாவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

சாங்சுயேசுன் கூறுகையில், உள்நாட்டுச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் உறுதித்தன்மையைச் சார்ந்து, வெளிப்புறத்தின் உறுதியற்ற தன்மையை சீனா கையாளும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்