உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல தரப்புவாதம் தேவை

வாணி 2019-10-10 17:42:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணிகளால், உலகப் பொருளாதார அதிகரிப்பு 2010ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிகத் தாழ்ந்த நிலையை எட்டக் கூடும் என்ற எச்சரிக்கையை உலக நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா அண்மையில் விடுத்தார். தவிரவும், தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் நிலவும் அறைகூவல்களைச் சமாளிப்பதற்கு பல தரப்பு வாதம் ஒரேயொரு தேர்வாகும் என்று ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கனடா ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டறிக்கை ஒன்றில் கருத்து தெரிவித்தனர்.

அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டால், வர்த்தக சர்ச்சைக்குக் கூடிய விரைவில் ஒரு தீர்வு முறையைத் தேட வேண்டும். இதற்காகப் பல தரப்புவாதம் மற்றும் சுயேச்சை வர்த்தக முறைமையைப் பேணிக்காக்கும் விதம், பெரிய நாடுகள் மேலதிகப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

மேலும் உலக மேலாண்மையிலும் பல தரப்பு விதிகளை வகுப்பதிலும் பங்கெடுக்கும் உரிமைகளைப் புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்க வேண்டும்.

சர்வதேசச் சமூகம் பல தரப்பு வாத எழுச்சிக்கிணங்க, சரிசம நிலையில் கலந்தாய்வு மேற்கொண்டால், அபாயத்தை நீக்கிக் கூட்டு வளர்ச்சி பெறும் புதிய பாதையில் நடைபோட முடியும் என்பதைச் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்