சீனாவின் திறப்பு உலகின் வாய்ப்பாகும்

வாணி 2019-11-04 14:31:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நடைபெறவுள்ள சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்களாட்சி, உலகளவில் இறக்குமதியை மையமாகக் கொண்ட முதலாவது தேசிய நிலைப் பொருட்காட்சியாகும். உலகிற்குச் சீனா முனைப்புடன் தனது சந்தையைத் திறக்கும் முக்கிய நடவடிக்கையாகவும் இது திகழ்கின்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இப்பொருட்காட்சியில் மொத்தம் 5783 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் பயனாகக் கடந்த ஓராண்டில் பல உயர் தரமான வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள் சீனச் சந்தைக்குள் நுழைந்து நன்கு விற்பனையாகி வருகின்றன. சீரான உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவை மூலம் சீனாவில் மாபெரும் சந்தை வாய்ப்பைப் பெறுவது உறுதி என்றும், திறப்பான சீனச் சந்தை கைவிடப்பட முடியாத வாய்ப்பாகும் என்றும் மிகப்பல வெளிநாட்டு வணிகர்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாக நடப்புப் பொருட்காட்சியில் பங்கெடுக்கும் அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இது சீனப் பொருளாதாரம் மீதான நம்பிக்கையையும் சீனச் சந்தைக்குள் நுழைய வேண்டிய வெளிநாட்டு நிறுவனங்களின் பேரார்வத்தையும் காட்டுகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்