சீனாவின் 4ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு முடிவு

வாணி 2019-11-20 19:13:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 4ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு அறிக்கை 20ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் சீனாவின் தொழிற்துறை மற்றும் சேவைத் தொழிலின் நிலைமை முக்கியமாக ஆராயப்பட்டு, சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் நடைமுறை விவரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பின்படி, 2018ஆம் ஆண்டின் இறுதிவரை சீனாவில் தொழிற்துறை மற்றும் சேவைத் தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 17 இலட்சத்து 89 ஆயிரமாகும். இது 2013ஆம் ஆண்டில் இருந்ததை விட 100.7 விழுக்காடு அதிகமாகும். தவிரவும், இத்துறைகளில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை 38 கோடிக்கும் அதிகமாகும். அவர்களில் பெண்களின் விகிதாசாரம் 37.7 விழுக்காட்டாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்