சீனாவில் எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சி

பூங்கோதை 2019-12-27 10:32:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் தொலைத் தொடர்பு வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் வென்கூ டிசம்பர் 26ஆம் நாள் பேசுகையில், சீனாவில் எண்ணியல் பொருளாதாரம், உயர் தரப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இதில் அதன் பங்களிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சீனாவில் மொத்த எண்ணியல் பொருளாதார மதிப்பு 31 லட்சம் கோடி யுவானாகும். மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 34.8 விழுக்காடை வகித்துள்ளது. மேலும், வணிகத் துறையில் 5ஜி என்ற தொழில் நுட்பத்தின் பரவல் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, 126 ஆயிரம் 5ஜி அடிப்படை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும், சீனாவின் அனைத்து நகரங்களிலும் ஒளியியல் இணையம் பரவல் செய்யப்பட்டுள்ளது. 4ஜி தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை 127 கோடியை எட்டியது. இது உலக அளவில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்