பரந்த சீனச் சந்தை

வாணி 2020-01-25 16:28:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு சீன மக்களின் வசந்த விழா கொண்டாட்டம், புதிய ரக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். விழாவின் போது சொந்த ஊர் மகிழ்ச்சியை நேரடியாக அனுபவிக்க முடியாத நிலையில், சீன மக்களின் உணவு வகைகளில் வெளிநாடுகளிலிருந்து வந்த பல சுவையான உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது திறந்த சந்தை சூழலின் பயன்களில் ஒன்றாகும்.

இணையம் மூலம் மக்கள் பல்வகை உணவுகளை வாங்குவது வழக்கமாகியுள்ளது. சீன சுங்கத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2019ஆம் ஆண்டு சீனாவில் நாடு கடந்த இணைய மூல வர்த்தகத்தின் இறக்குமதி அளவு 9181 கோடி யுவானாகும். 2018ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 16.9 விழுக்காடு அதிகம்.

வெளிநாட்டுத் திறப்பு மூலம் சீனா உலக நாடுகளுடன் தங்களது வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றது. இது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான உந்து சக்தியாக மாறுவது உறுதி என்று நம்பப்படுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்