சீனாவில் இன்னொரு புதிய அமெரிக்க முதலீட்டுத் திட்டப்பணி

வாணி 2020-04-23 19:43:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் எக்ஸான்மொபைல் சீனாவின் ஹுய்சோ நகரில் 1000 கோடி அமெரிக்க டாலருடன் ஒரு புதிய திட்டப்பணியை மேற்கொள்ளும். அதன் துவக்க விழா பெய்ஜிங், ஹுய்சோ மற்றும் அமெரிக்காவின் டாலஸ் நகரில் இணையம் மூலம் ஒரே நேரத்தில் ஏப்ரல் 22ஆம் நாள் நடைபெற்றது. உலக எண்ணெய் சந்தை கடும் சிக்கலில் சிக்கியுள்ள பின்னணியில், அமெரிக்க எண்ணெய் நிறுவனம் சீனாவில் பெரும் தொகையுடன் முதலீடு செய்வது சீனச் சந்தையின் மீதான உறுதியான நம்பிக்கையையும் எதிர்ப்பார்ப்பையும் காட்டுகின்றது.

சீனாவில் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டைத் தவிர, பல புதிதாக வெளியிடப்பட்ட சட்ட விதிகளும் சீனப் பொருளாதாரத் துறையின் போட்டியாற்றலை அதிகரித்துள்ளன என்று அமெரிக்க எக்ஸான்மொபைல் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி டேரன் வூட்ஸ் இத்துவக்க விழாவின் போது கூறினார்.

அதைப் போல், கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் 42 கோடி டாலரை கூடுதல் முதலீடு செய்வதாக அமெரிக்காவின் வோல்மா நிறுவனம் ஏப்ரல் 8ஆம் நாள் அறிவித்தது.

ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் இது குறித்து கூறுகையில், வைரஸ் பரவலால் ஏற்பட்ட மந்தமான நிலையிலிருந்து சீனா முதலில் விடுபடும் என்று கூறினார். உலகத் தொழில் சங்கிலியிலுள்ள முக்கிய பகுதியாகத் திகழும் சீனா தொடர்ந்து உலகளவில் அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் நாடாக உள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்