சீன ஏற்றுமதி-இறக்குமதிக்கு முதலாவது இணையவழி பொருட்காட்சி

வான்மதி 2020-06-11 10:49:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

127ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி ஜுன் 15 முதல் 24ஆம் நாள் வரை இணைய வழியாக நடைபெற உள்ளது. 63 ஆண்டுகால வரலாறுடைய இப்பொருட்காட்சி இணையத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை. இப்பொருட்காட்சிக்கான சில பொறுப்பாளர்கள் 10ஆம் நாள் இது பற்றி அறிமுகம் செய்கையில், இப்பொருட்காட்சியின் விற்பனை மற்றும் கொள்வனவு வணிகர்களுக்கு இலவசமாக திறந்து வைக்கப்பட்டு, புதிய கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளின் வடிவமைப்புடன் நடத்தப்படும் என்றும், இப்பொருட்காட்சியின் வழி ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை வர்த்தக ஒத்துழைப்பை புதிய நிலைக்கு முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றல் மேலும் வெளிக்கொணரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், சீன வணிக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் பேசுகைசில், வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா உறுதியுடன் விரிவாக்கி வரும் ஆக்கப்பூர்வ சமிக்கை நடப்பு பொருட்காட்சியின் மூலம் உலகிற்கு தொடர்ந்து வெளிக்காட்டப்படும் என்றும் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்