பொருளாதாரத்தை முன்னேற்றும் புதிய ரக இணைய வழி நுகர்வு

ஜெயா 2020-07-17 11:28:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் தூதஞ்சல் எண்ணிக்கை 6 கோடியே 35 இலட்சத்து 30 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 81.7 விழுக்காடு அதிகம். கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் பொது மக்களின் வருமான உயர்வின் காரணமாக, சீனப் பொருளாதார அதிகரிப்பின் உந்து ஆற்றல் முதலீட்டிலிருந்து நுகர்வாக மாறியுள்ளது.

இது குறித்து சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், நாடு முழுவதிலும் இணைய வழியாக நடைபெற்ற சில்லறை விற்பனைத் தொகை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 10 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.3 விழுக்காடு அதிகம்.

வைரஸ் பரவல் தடுப்புக் காலத்தில், இணையதள வழியாக புதிய ரக சந்தை நிலைமையின் புத்தாக்கம் விரைவுப்படுத்தப்பட்டு, நேரலையின் மூலம் பொருட்களை விற்பனை செய்வது, குடியிருப்புகளில் நடைபெறும் பெருமளவு விற்பனை முதலிய புதிய ரக நுகர்வு பெரிதும் வளர்ந்துள்ளது.

புதிய ரக நுகர்வு என்பது “இணையம் ப்ளஸின்” அடிப்படையிலான நுகர்வின் புதிய மாதிரி, புதிய நிலைமை மற்றும் புதிய இடம் என்ற பொருளுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்