பெய்ஜிங் நுகர்வுக் காலம் என்னும் நிகழ்ச்சி மீண்டும் துவக்கம்

பூங்கோதை 2020-07-26 16:50:31
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பெய்ஜிங்கில் திடீரென்று பரவிய இந்நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் எச்சரிக்கை நிலை 2வது நிலையிலிருந்து 3வது நிலையாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பின் அடிப்படையில், “பெய்ஜிங் நுகர்வுக் காலம்” என்னும் நிகழ்ச்சி மீண்டும் துவங்கியுள்ளது. ஜூலை 26ஆம் நாள் முற்பகல் 10 மணி 15 லட்சம் சலுகை நுகர்வுச் சீட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், கோடைக்கால விடுமுறையில் கால்பந்து பயிற்சி வகுப்பு, கோடைக்கால முகாம் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் துவங்க உள்ளன.

தவிர, வாழ்க்கை சேவைக்கான பல்வேறு மின்னணு வணிக அலுவல் மேடைகளும், 50க்கும் மேலான பேரங்காடிகளும், நுகர்வை முன்னேற்றும் பல்வகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்