சீனச் சந்தையில் இந்திய ஓஒய்ஓவின் பெரும் வளர்ச்சி

வாணி 2020-08-08 17:41:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

படம், சின்குவா

உள்நாட்டுச் சுழற்சியை முக்கியமாகக் கொண்டு, உள்நாடு மற்றும் வெளிநாடு என இரு சுழற்சிகளை ஒருங்கிணைக்கும் புதிய வளர்ச்சி முறைமையை உருவாக்க வேண்டும் என்று சீனா அண்மையில் தெரிவித்துள்ளது. உள்நாட்டு வளர்ச்சி என்ற திசைக்குச் சீனா மாறுமா என்று சில ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. உண்மையில் இது ஒரு தவறான மதிப்பீடு. உள்நாட்டில் பயனுள்ள தேவைகளை விரிவாக்குவது சீனா முன்வைத்த உள்நாட்டுச் சுழற்சியின் இலக்காகும்.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூற வேண்டுமாயின், இந்தியாவின் ஓஒய்ஓ(OYO)சங்கிலித் தொடர் தங்கும் விடுதி 2017ஆம் ஆண்டு சீனாவுக்குள் நுழைந்தது. 2020ஆம் ஆண்டு மே திங்கள் வரை, இது சீனா முழுவதிலும் 10 ஆயிரம் விடுதிகளைத் திறந்து, 5 இலட்சம் அறைகளைக் கொண்ட மிகப் பெரிய தொடர் தங்கும் விடுதியாக மாறியுள்ளது. அதன் சந்தை மதிப்பு அதிர்ச்சி தரும் வகையில், 500 கோடி அமெரிக்க டாலர் என்ற நிலையில் உள்ளது. தவிரவும், இது சீனாவில் பிரபலமாக வளர்ந்து வரும் மெய்துவன் எனும் இணையச் சேவை சின்னத்துடன் நீண்டகால ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது. தற்போது இதன் பதிவுகளில் 50 விழுக்காட்டுக்கு மேல் மெய்துவன் இணையம் மூலம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுத் திறப்பு தான் உள்நாட்டுச் சுழற்சியின் ஆதாரமாகும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சீன முதன்மை பொருளியலாளர் ச்சின் ட்சிச்சியாங் கருத்து தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நுகர்வுத் துறையிலான உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலம், அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, வணிகச் சூழ்நிலை மேம்பாடு, கட்டுப்பாட்டைத் தளர்த்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாடு கடந்த நிறுவனங்கள் தொழில் சங்கிலிகள் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளை ஈர்த்து, சீன நுகர்வுச் சந்தையின் பயன்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்