அமெரிக்காவில் சட்ட அமைப்புச் சூழ்நிலை நம்பகத்தகுந்ததா?

வாணி 2020-08-09 18:15:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 16.5 கோடி. இது அமெரிக்காவுக்குச் சொந்தமான முகநூல், சுட்டுரை, யூடியுப் ஆகியவற்றைத் தாண்டியுள்ள சூழலில், அமெரிக்க அரசு மீண்டும் தேசிய பாதுகாப்பு என்பதைச் சாக்குப்போக்காகப் பயன்படுத்தி டிக்டாக்குக்கு தடை விதித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் 80ஆவது ஆண்டுகளில், ஜப்பானின் டொஷிபா, மிட்சுபிஷி, 21ஆவது நூற்றாண்டின் துவக்கத்தில் பிரான்ஸின் அல்ஸ்டோம், தற்போது சீனாவின் ஹுவாவெய், டிக்டாக் ஆகிய வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் மீது அமெரிக்கா அடக்குமுறையுடன் செயல்படுவது அதிகம்.

அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சொந்த நாட்டின் ஆதிக்க தகுநிலையைப் பேணிக்காக்கும் பொருட்டு, சந்தைக்கு மதிப்பளித்தல், நியாயமான போட்டி முதலியவை அமெரிக்காவின் போலி முகக் கவசமாக மட்டும் திகழ்கின்றன என்பதை மேற்கூறிய மாதிரிகள் நிரூபித்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளில், அமெரிக்காவின் சட்ட அமைப்புச் சூழ்நிலையின் மீதிருந்த நம்பிக்கையால் தான், பல வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்தன. இவை அமெரிக்காவின் பொருளாதாரத்தைத் தூண்டும் சக்தியாகும். தற்போது, அமெரிக்க அரசு தனது செயல்கள் மூலம் இந்த நம்பிக்கையைச் சீர்குலைத்து வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்