சீனச் சந்தையிலிருந்து விலகுவதாக செல்வது ஆதாரமற்றது

சரஸ்வதி 2020-08-19 20:46:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரல் பரவல் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கடுமையான நிலையில், கரோனா வைரஸ் அறைகூவலைச் சமாளித்து, சீனப் பொருளாதாரம் விடாப் பிடியான மற்றும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்காட்டியுள்ளது. தவிரவும், வெளிநாட்டுத் திறப்பு அளவை தொடர்ந்து விரிவாக்கி, வெளிநாட்டுப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை சீனா ஆக்கப்பூர்வமாக விரைவுபடுத்தி வருகிறது. இவ்வாண்டின் முற்பாதியில், பல வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள், சீனாவில் முதலீடுகளை அதிகரித்து, சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளன.

சீனாவுடனான உறவைத் துண்டிப்பது தொடர்பான தவறான கூற்றுகளை மேலை நாடுகளின் சில அரசியல்வாதிகள் பரப்பினர். இது குறித்து, ஃபுஜிபிலிம்(சீனா)நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டேக்டோமி ஹிரோனாபு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், தற்போது, சீனப் பொருளாதாரம், உலகில் 16 விழுக்காட்டுப் பங்கைத் தாண்டி, அமெரிக்காவை அடுத்த 2ஆவது வலுவான பொருளாதாரமாக விளங்குகிறது. சீனாவில் மாபெரும் சந்தை வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. தயாரிப்புத் தொழில் நிறுவனமான ஃபுஜிபிலிம் நிறுவனம், ஈர்ப்பு மிக்க மற்றும் விரைவான வளர்ச்சியடையும் சந்தை வாய்ந்த சீனாவிலிருந்து விலகிச் செல்லப்போவதில்லை. சீனாவுடனான உறவை முற்றிலுமாக துண்டிப்பது ஆதாரமற்ற கூற்று என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்